‛‛அதிக வெயில்’’.. இந்தியாவிலேயே 3ம் இடம்பிடித்த ஈரோடு.. இயல்பை விட 5% அதிகரிப்பு! அலறும் மக்கள்
சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3வது இடத்தை பிடித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை மழை சில இடங்களில் பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் என்பது தணிந்தது. ஆனால் தற்போது மீண்டும் வெப்பநிலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மேலும் வெப்ப அலை என்பது கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ் (109.4 பாரன்ஹீட் வெப்பம்) வெப்பநிலை பதிவாகி இருந்தது. இது இயல்பு வெப்பநிலையில் இருந்து 5.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும். இதனால் நேற்று ஈரோட்டில் வழக்கத்தை விட அதிக வெயில் பதிவாகி இருந்தது.
இதற்கிடையே தான் வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடத்தில் ஈரோடு 3ம் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது நேற்றைய தினம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா ஆகிய இடங்களில் நேற்று தலா 43.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த 2 நகரங்களுக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் தான் அதிகபட்ச வெப்பநிலையாக 43 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை பொறுத்தமட்டில் நேற்றைய தினம் இயல்பு வெப்பநிலையை விட 5.5சதவீதம் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதுதான் இந்தியாவிலேயே அதிக வெப்பநிலை பதிவான நகரங்களின் பட்டியலில் ஈரோட்டை 3வது இடத்தில் இடம்பெற செய்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வால் ஈரோடு மக்கள் நேற்று கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுதவிர நேற்று தமிழ்நாட்டில் 10 இடங்களில் 40 டிகிரி செல்சியஸை விட அதிக வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதன்படி சேலத்தில் 41.6 சதவீதம் , வேலூர் 41.5 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 2.6 சதவீதம் அதிகம்), கரூர், தர்மபுரியில் 41.2 டிகிரி செல்சியஸ், மதுரை 40.7, திருத்தணி, திருப்பத்தூர், 40.8 டிகிரி செல்சியஸ், திருச்சி 40.3 டிகிரி செல்சியஸ், கோவை, நாமக்கல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை வானிலை மையம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது இன்றும், நாளையும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். அதோடு வரும் 27 ம் தேதி வரை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் என்பது அதிகரித்து என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications