மிரட்டும் பெங்கல் புயல்.. முழுவீச்சில் தயாரான சுகாதாரத்துறை தந்த அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக இன்று முதல் சூறைக்காற்றுடன் புதுச்சேரி, தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது.இந்த புயல் இன்று இரவு 9 மணி நிலவரப்படி நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்நிலையில் தான் புயலையொட்டி தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதோடு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
1. குறுகிய பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் (EDD Mothers) முன்னரே, மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2. தகுந்த மருந்து, மாத்திரைகள், பாம்பு கடி விஷமுறிவு ஊசி (ASV) மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஆகியவற்றை இருப்பு வைக்க உரிய வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
3. மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4. தகுந்த மருத்துவ நிவாரண முகாம்கள், தேவைப்படின் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
5. மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மழை்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்க அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6. அரசின் வழிக்காட்டுதலின்படி பொதுமக்கள், விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவு சேவைகளுக்காக எண் 108 ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications