வெளுத்து வாங்கும் மழை! ஒருத்தரும் காப்பாத்த வரவில்லையே.. நெல்லையை உலுக்கும் அழுகுரல்
நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து 20 மணி நேரமாக மழை பெய்து வரும் நிலையில், ஒருசில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி ஜெபாநகர் பகுதியில், ஒருத்தரும் காப்பாத்த வரவில்லையே?.. யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா என்று பெண் ஒருவர் அழும் வீடியோ நெல்லையை உலுக்கியுள்ளது.
டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது பெய்த மழை அதன்பிறகு சொல்லிக்க்கொள்ளும் அளவுக்கு பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை பெய்ய ஆரம்பித்த மழை தற்போது வரையில் நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது. அதிகப்படியான மழை பெய்துள்ளது.

கிட்டத்தட்ட கடந்த 30 வருடத்திற்கு பிறகு அதிகப்படியான மழை பெய்துள்ளது. சென்னையில் பெய்த மழையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 4 மாவட்டங்களில் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சுமார் 20 மணி நேரமாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள், தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரையோர இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருசில இடங்களில் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம் சரவணா ஸ்டோர் அருகே உள்ள ஜெபா நகர் பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. ஜெபா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தனது வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா? என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
A retired govt-aided college physical director says that for the first time in three decades the rainwater enters into her house located in Jeba Nagar near Saravana Store in Tirunelveli and seeks help from officials. pic.twitter.com/JDkrFoKSkP
— Thinakaran Rajamani (@thinak_) December 17, 2023
இது தொடர்பாக அந்த அம்மா கண்ணீருடன் அழுதுகொண்டே கூறுகையில், "இந்த வீடு கட்டி 35 வருஷம் ஆகுது. ஒருநாள் கூட இந்த வீட்டில் தண்ணீர் இப்படி வந்ததே இல்லையே.. இப்போ பார்த்து இவ்வளவு தண்ணீர் வருதே.. கலெக்டர் வரவில்லை.. யாரும் வரவில்லை.. ஒருத்தரும் காப்பாற்ற வரவில்லையே.. யாராவது காப்பாற்ற வருவாங்களா? யாராச்சு காப்பாற்ற வரமாண்டாங்களா.. நான் இந்த சின்ன பிள்ளையை வச்சுக்கிட்டு என்ன செய்ய போறேனோ" என்று கண்ணீர் மழ்க அழுதுகொண்டே கூறுகிறார்.
கடந்த 30 ஆண்டுகளில் இது போன்ற ஒரு வெள்ளம் பார்த்ததில்லை. முதல் முறையாக எனது வீட்டிற்குள் இப்படி தண்ணீர் புகுந்து அதிகாரிகளிடம் அதிகாரியிடம் உதவி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications