தலைக்கு தில்லை பாருங்க! ஆறு போல் ஓடும் வெள்ள நீர்.. வெறும் டியூப் கட்டி அசால்ட்டாக நீந்திய நபர்
தூத்துக்குடி: ஆறு போல் இருக்கும் வெள்ள நீரில் வெறும் லாரி டியூப்பை கட்டிக் கொண்டு கரை சேர்ந்திருக்கும் நபரை பார்த்து அங்கு சூழ்ந்திருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த பேய் மழையால் ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு கிராமங்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்து வருகிறது.

பல்வேறு அணைகள், ஆறுகளில் இருந்து பெருவெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது. இதனால் மக்கள் கழுத்தளவு தண்ணீரில் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களின் வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்கள், மளிகை சாமான்கள், அரிசி மூட்டைகள் எல்லாம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
இதனால் 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் , குடிநீர், உணவு இல்லாமல் தத்தளித்து வருகிறார்கள். பல இடங்களில் மீட்பு குழுவினர் கூட நுழைய முடியாத நிலை உள்ளது. பல கிராமங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூர் என்ற கிராமத்தை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அந்த கிராமத்திற்கு செல்லும் பாதையில் காட்டாற்று வெள்ளம் ஆறு போல் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் அந்த ஊருக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அந்த ஆறு போல் தண்ணீர் தேங்கியுள்ள சுமார் 2 கி.மீ. தூரம் கொண்ட பகுதியை ஒருவர் கடந்து வந்துள்ளார்.
அவர் லாரி டயர் டியூப்பை கட்டிக் கொண்டு நீந்தியபடியே கரை சேர்ந்துள்ளார். அவர் பேரூரை சேர்ந்த காசி. அந்த கிராமத்தில் 1000 பேருக்கு மேல் இருக்கிறார்களாம். அவருக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள் என்கிறார்.
மேலும் தான் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார் காசி. அவருடைய ஊர் மக்கள் எல்லாரும் நலமாக இருக்கிறார்கள் என்றார். மேலும் அவருடைய ஊருக்கு வர சாதாரண படகு போதாது என்றும் மோட்டார் படகு இருந்தால் அங்கிருக்கும் மக்களை மீட்டெடுக்கலாம் என்கிறார். அவர் 2 கி.மீ. தூரம் நீந்தியே கரைக்கு வந்ததும் பயங்கரமாக மூச்சு வாங்கியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications