இரவு முழுக்க 19 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை.. வானிலை மையம் தந்த ஜில் அப்டேட்! ஆஹா சூப்பர்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பத்திற்கு மத்தியிலும் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இது கோடை வெயிலில் இருந்து மக்கள் தப்பிக்க ஒரு நல்ல வாய்ப்பைத் தருகிறது. இதற்கிடையே இன்றிரவு, அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி வருகிறது. வெப்பம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருக்கிறது. அதேநேரம் கோடை வெப்பத்தைக் குறைக்கும் வகையில் ஆங்காங்கே பரவலாக மழையும் பெய்தே வருகிறது.

18 மாவட்டங்களில் மழை
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை இருக்கு
மேலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் மழை நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே வெப்பம் படுத்தி எடுத்து வந்த நிலையில், இந்த மழை வெப்பத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பம்
வெப்பத்தைப் பொறுத்தவரை இன்று மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் அதீத வெப்பம் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக கரூர் மற்றும் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. தொடர்ந்து திருச்சி, வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சேலம் & ஈரோட்டில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. மேலும், திருத்தணியில் 101 டிகிரி பாரன்ஹீட்டும், தர்மபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் (ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 27 முதல் மே 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (25-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications