சென்னை உட்பட 5 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரம் பெய்ய போகுது கோடை மழை- வானிலை மையம் ஹேப்பி நியூஸ்
சென்னை: கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்கும் வகையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்தது. மாநிலம் முழுக்க பருவமழை காலத்தில் பரவலாக மழை இருந்த நிலையில், அதன் பிறகு வெப்பம் சட்டென அதிகரித்தது.

பருவமழை முடிந்த உடனேயே வெப்பம் உச்சம் தொட்டது. முன்பெல்லாம் மே மாதம் தான் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும். ஆனால் இந்தாண்டு பிப். மாதமே வெப்பம் சில மாவட்டங்களில் சதமடித்துவிட்டது.
மழை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமானது. இருப்பினும், கடந்த சில நாட்களாக வானிலை மொத்தமாக மாறியது. மாநிலத்தில் வெப்பம் குறைந்த நிலையில், பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்யத் தொடங்கியது. கோடைக் காலத்தில் பெய்த இந்த மழைக்குப் பலருக்கும் நிம்மதி தருவதாக இருந்தது.
அடுத்த 3 மண நேரம்: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கேற் தங்கள் திட்டங்களை அமைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications