நள்ளிரவு கொட்ட போகுது மழை.. சென்னை புறநகர் உட்பட 14 மாவட்ட மக்களுக்கு வந்த பரபர அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு... அதாவது அதிகாலை 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த முறை கோடை மிகவும் மோசமாக இருந்தது. பிப். மாதமே சில இடங்களில் வெப்பம் சதமடித்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பல மாவட்டங்களில் வெப்பம் உச்சம் தொட்டது.

Weather Chennai meteorological dept rain

இதனால் பொதுமக்களால் மதிய நேரங்களில் வெளியே கூட வர முடியாத சூழலே ஏற்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக வானிலை மொத்தமாக மாறி இருக்கிறது.

மழை இருக்கு: மாநிலத்தில் பரவலான இடங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு... அதாவது அதிகாலை 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த வானிலை மையம் அலர்ட் வெளியிட்டுள்ளது.

14 மாவட்டங்கள்: அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை தவிர்த்து புறநகர்ப் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்ய உள்ளது.. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வானிலை மையம் முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே நாளை முதல் ஜூன் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்த வரையில், ஜூன் 12 வரை அதற்கடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 1 -2° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+