மெல்ல மாறும் வானிலை! மழையும் குளிரும் இல்லை! அப்போ தமிழகத்தில் கிளைமேட் எப்படி இருக்கும்! புது தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் மழை சீசன் முடிந்துவிட்ட நிலையில், மாநிலத்தில் கிளைமேட் மெல்ல மாறி வருகிறது. மாநிலத்தில் ஓரிரு இடங்களில் குளிர் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் மதிய நேரத்தில் வெயில் தான் இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சமயத்தில் நல்ல மழை இருந்தது. பெரும்பாலான நீர்நிலைகள் நல்ல நிலைக்கு வந்திருந்தது. மழை சீசன் முடிந்தவுடன் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இதற்கிடையே இப்போது குளிரும் குறைந்துவிட்ட நிலையில், மெல்ல வெயில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கோடைக் காலம் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கவில்லை என்ற போதிலும் கணிசமாக வெப்பம் அதிகரித்தே வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரியளவில் எங்கும் மழை பதிவாகவில்லை.
வானிலை மையம்:
வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்ரவரி 13 முதல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை கிளைமேட்:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (11-02-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (12-02-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கிளைமேட் இப்படி சிறப்பாகவே இருக்கும் வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், அதற்கேற்ப மக்கள் பிளான் செய்து கொள்ளலாம்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications