சென்னையில் மழையை சந்தித்த தமிழ்நாடு வெதர்மேன்.. என்னன்னு கேட்டது குத்தமாக.. மகாபிரபு என்ன நினைப்பாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் துரைப்பாக்கம், வேளச்சேரி, ரேடியல் சாலை பகுதிகளில் பெய்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் போட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர், போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக வெப்பம் குறைந்துள்ளது. அதேநேரம் வடமாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அங்கு 100, 105, 110 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. சென்னையை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது இந்த முறை வெயிலின் தாக்கம் குறைவு தான்.

Got a chance to meet the rain in Thoraipakkam Velachery road Tamil Nadu Weatherman Pradeep John tweet

ஆனால் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமே சென்னைக்கு பெரிய கஷ்டத்தை கொடுத்தது.ஏனெனில் சென்னை மாநகரம் கோவை போல் மரங்கள் நிறைந்த நகரம் அல்ல.. மரங்களை பார்ப்பதே அபூர்வம் என்கிற அளவில் இருக்கிறது. இதனால் வெப்ப அலையை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்து வந்தார்கள். இது ஒருபுறம் எனில் காற்றில் ஈரப்பதம் குறைந்தே காணப்பட்டது. இது சென்னைவாசிகளை உஷ்ணத்தில் தள்ளியதுடன், துன்பத்தில் ஆழ்த்தியது.

பகலில் ஃபேனை போட்டால் சூடான காற்றும், இரவில் பேனை போட்டால் அதைவிட சூடான காற்றும் வந்து மக்களின் தூக்கத்தை கெடுத்தது. பற்றாக்குறைக்கு மின்வெட்டு வேறு அடிக்கடி ஏற்பட்டதால் அவதிப்பட்டார்கள். ஏசி இதுவரை வாங்காதவர்கள் கூட தவணைக்கு ஏசி வாங்க மாட்டத்தொடங்கிவிட்டார்கள். சென்னையில் வரும் மாதம் மின் கட்டணம் மிகப்பெரிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கலாம். 2000 வந்த வீடுகளில் 5000 வரை கூட வர வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு பகலில் கூட மக்கள் ஏசியை பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்த நிலையில் சென்னையில் கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் லேசான மழை பெய்தது. திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னையில் நேற்று வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனிடையே டுத்து வரும் 2 நாட்களுக்கு தொடரும் எனவும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வானிலை மையம் அறிவித்தபடியே சென்னையில் இன்று காலை மழை பெய்தது. வேளச்சேரி, துரைப்பாக்கம், ரேடியல்சாலை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதுபற்றி தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட ட்வீட் பதிவில், துரைப்பாக்கம் வேளச்சேரி சாலையில் மழையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறி, மழையில் காரில் செல்லும் வீடியோவை பதிவிட்டிருந்தார். அதற்கு கீழ் நெட்டிசன்கள் ஒவ்வொரு ஊரின் பெயரை போட்டு எப்போது மழை பெய்யும் என்று கேள்விகளை எழுப்பியபடி இருந்தனர். நெட்டிசன் ஒருவர் கேட்டதாக சொல்லுங்க என்றார், அதற்கு வெதர்மேன் என்ன என்று கேட்டார்..

அதற்கு நெட்டிசன். பார்த்து ரொம்ப நாளாச்சு.. நல்ல இருக்கியா என்று கேட்டு சொல்லுங்க.. என்று கூறினார்.. மகாபிரபுவான மழை எப்போதாவது தான் சென்னையில் எட்டி பார்க்கிறார்.. இப்படியான சூழலில் அவரையே மழை.. நல்ல இருக்கியா மழை என்று நலம் விசாரிக்கும் அளவிற்கு போய்விட்டார்கள் நம்மூர் நெட்டிசன்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+