மழை வருது மழை வருது..பாம்பு பிடிப்பவர்கள் கவனம்! அலர்டாய் ஆட்சியர்கள்! பொதுமக்களுக்கு பறந்த உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்களுக்கும் எச்சரிக்கை மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைது.

இதனையடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) கனமழை அல்லது மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மழை வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே பருவமழை காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அறிவிப்புகள் தெரிவிக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை 24X7 என்ற முறையில் செயல்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு தொலைபேசி மற்றும் செல்லிடைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
நிவாரண முகாம்கள்: கனமழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண மையங்கள் அமைப்பதற்காக கண்டறியப்பட்ட பள்ளிகள், விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் கட்டடத்தின் உறுதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களில் குடிநீர், மின்சாரம், ஜெனரேட்டர், டீசல், மளிகைப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், மெழுகுவர்த்திகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு உணவு: முகாம்களில் தங்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கு தேவையான பொருட்களை வழங்க மொத்த வியாபாரிகளை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து வட்டங்களிலும் உள்ள முதல் தகவல் அளிப்பவர்களின் இருப்பு நிலை, செல்போன் எண், அவர்களின் பயன்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மீட்பு பணி: தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் படகு போன்ற மீட்பு பணிக்கான சாதனங்கள் மற்றும் வீரர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் நீச்சல் தெரிந்தவர்கள், பாம்பு பிடிப்பவர்கள், மழை வெள்ளத்தில் சாலைகளில் சாய்ந்து விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மரம் வெட்டுபவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்படும் மின்கம்பங்கள், வயர்களை உடனடியாக அகற்றி மின்சாரம் தடையின்றி வழங்க, மின்கம்பங்கள், மின்மாற்றிகள், வயர்கள் மற்றும் தேவையான பணியார்களுடன் மின்வாரிய அலுவலர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
குடிநீர் விநியோகம்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினி மூட்டைகளை தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும், நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, நீர் நிரப்பி குளோரிந் கலந்து விநியோகிக்க வேண்டும்.
வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குளம், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால், சாலைகள் மற்றும் பாலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சீரமைக்க ஜேசிபி வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அத்தியாவசிப் பொருட்கள்: ஆவின் பால் போன்ற அத்தியாவசிப் பொருட்கள் தடையின்றி விநியோகிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து, தேவையான பணியாளர்கள் மற்றும் கூடுதல் வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக மலைப் பகுதிகளுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் போதிய அளவு இருப்பு இருப்பதையும், அந்த பொருட்கள் மழையில் நனைந்துவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் போதுமான அளவு மருந்து பொருட்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். கர்ப்பிணிகள், நோயாளிகளை உடனடியாக மீட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கால்நடைகள்: ஆடு, மாடு மற்றும் இதர கால்நடைகளை மழைநீர் சூழாத உயரமான பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். மழைவெள்ளத்தில் சிக்கி கால்நடைகள் இறந்தால், அதுகுறித்த தகவல்களை கால்நடைத்துறையினர் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மழைவெள்ளத்தால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர் சேதம் ஏற்பட்டால் அந்த பாதிப்புகள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் சேத மதிப்பீடு தயார் செய்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் கவனம்: அணைகள், ஆறு, ஏரி, குளம் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் வரும் வெள்ள நீரை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ குழந்தைகளை அனுமதிக்க கூடாது என்பது குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதிக மழைப்பொழிவு ஏற்பட்டாலும். வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications