ஜென்டில்மேன் அமீர் கான்.. அவ்ளோ பெரிய ஸ்டார்.. சாமானியர் போல காத்திருந்தார்.. பிரம்மித்த அமைச்சர்!
சென்னை: உங்கள் பக்கத்தில் இருக்கும் ஜென்டில்மேன் அமீர் கானுக்கு நன்றி சொல்லுங்கள். அவ்வளவு பெரிய ஸ்டாரான அவர், தன்னை மட்டும் மீட்க வேண்டும் என்பதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை, எல்லா மக்களையும் போல மீட்கப்படுவோம் என காத்திருந்தார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக கொட்டிய மழையில், பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறின.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் இன்று பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், "எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து காரப்பாக்கத்தில் நீர்மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்துள்ளேன், மின்சாரம் இல்லை வைஃபை இல்லை. போன் சிக்னல் இல்லை, ஒன்றுமே இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, படகு மூலம் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கி உள்ளன. ஏற்கனவே 3 படகுகள் செயல்படுவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசு சிறப்பான பணியாற்றுகிறது. அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என தெரிவித்திருந்தார்.
விஷ்ணு விஷால் படகில் மீட்கப்பட்டதாக, வெளியிட்ட புகைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும் இருந்ததுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் அமீர்கான் சென்னையில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் மும்பைக்குச் செல்வதும், சென்னைக்கு வருவதுமாக இருந்த நிலையில், சென்னை வெள்ளத்தில் அவர் சிக்கிக்கொண்ட தகவலே, அவர் விஷ்ணு விஷாலோடு சேர்ந்து மீட்கப்பட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரியவந்தது.
Thanks for the appreciation @TheVishnuVishal and please do thank the gentleman next to you for being such a class human being ! Astounding that he didn't try to pull any strings to be rescued ! Awesome to see him being so grounded and WAITING HIS TURN to be rescued just like any… https://t.co/3ByJr8jRRs
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 5, 2023
அமீர்கான் காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் தங்கி இருந்தாரா அல்லது அவர் அங்கு வேறு ஏதேனும் குடியிருப்பில் இருந்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை. ஏனெனில் விஷ்ணு விஷால் தனது முந்தைய பதிவில் அமீர் கான் தன்னுடன் இருப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சென்னை வெள்ளத்தில் 2 நாட்களுக்கு பிறகு, சாதாரண நபர் போல, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் மீட்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாராட்டுக்கு நன்றி விஷ்ணு விஷால். மிகச்சிறந்த மனிதரான உங்கள் பக்கத்தில் நிற்பவருக்கு நன்றி சொல்லுங்கள்! ஆச்சர்யப்படும் வகையில், அவர் மீட்கப்படுவதற்கு எந்தக் "கயிற்றையும்" இழுக்க முயற்சிக்கவில்லை, சிபாரிசு மூலம் காரியம் சாதிக்க நினைக்கவில்லை. சக குடிமக்கள் அனைவரையும் போலவே அவர் மிகவும் உறுதியோடு, தான் மீட்கப்படுவதற்காகக் காத்திருப்பதையும் பார்ப்பது பிரமிக்க வைக்கிறது.
தங்கள் பிரபலத்தன்மையை வைத்து, காரியம் சாதிக்க முயல்பவர்களுக்கு இவர் ஒரு பாடம். அமீர் கான் போன்றவர்கள், இருக்கும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, பொறுமையாக அவர்களின் முறைக்காக காத்திருப்பதற்காக நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாகக் கடைப்பிடிப்போம்." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் வெள்ளம் வந்ததை ஏற்க முடியாது, எம்எல்ஏக்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்ட நடிகர் விஷாலுக்கு, அமைச்சர் ராஜா பதிலடி தெரிவித்திருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து, மழை ஓய்ந்த பிறகுதான் படிப்படியாக, மழைநீர் வடிந்து வருகிறது. சென்னை நகரின் பல இடங்களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது. நீர் தேங்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 32,158 பேர் வெள்ளம் சூழப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். எனினும், புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் குறைந்தபாடில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications