உச்சாணிக்கு ஏறிய வெயில்.. உங்க வீட்டில் இதை பண்ணாலே போதுமே: வானிலை ஆய்வுமைய முன்னாள் இயக்குநர் ரமணன்
சென்னை: வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவரும்நிலையில், இதிலிருந்து எப்படி சமாளிப்பது என்பது குறித்து, வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. 106, 107 டிகிரி என்று தமிழகத்தின் மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரிக்கிறது.. இன்னும் கத்தரி வெயிலே ஆரம்பிக்காத நிலையில், பொதுமக்கள் இப்போதே இந்த வெயிலை பார்த்து கதிகலங்கி போயிருக்கிறார்கள்.

வெயில்: இந்த வெயிலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.. தமிழகம் போலவே, கேரளாவிலும் வெப்பத்தாக்கத்துக்கு மயங்கி விழுந்து 7 பேர் இறந்துவிட்டார்கள்.. இந்த வெயில், இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்கிறார்கள்.. அதனால்தான், வானிலை மையமும், தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து, பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் தினமும் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரபல சேனல் ஒன்றுக்கு சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் பேட்டி அளித்துள்ளார். அதில் இந்த வெப்பத்திலிருந்து தப்பித்து கொள்வது குறித்து பொதுமக்களுக்கு சில அட்வைஸ்களை தந்துள்ளார். அதன் சுருக்கம் இதுதான்:
பட்டியல்: "நாடுகளின் பட்டியலை அடிப்படையாக வைத்தே புயல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது.. வடஇந்திய புயல்களுக்கும் இப்படித்தான் பட்டியலின் அடிப்படையில் புயல்களுக்கு பெயர் வைக்கப்படும்.
இந்தியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஈரோன், ஓமன், சவூதி அரேபியா இப்படி பட்டியல்கள் இருக்கும். இதில், A எழுத்தில் நாடுகள் எதுவும் இல்லை என்பதால், B என்ற எழுத்திலுள்ள பங்களாதேஷ்தான் முதல் நாடாக இருக்கும்.. கடைசி நாடாக Y அதாவது ஏமன் இருக்கும். இந்த வரிசையில் புயல்களுக்கு பெயர் வைக்கப்படும்.
உச்சி வெயில்: 12 மணிக்கு உச்சி வெயில் என்று சொல்வார்கள்.. ஆனால் அதிகபட்சமாக வெயில் பதிவாவது 2.45 மணிக்குதான்.. காரணம், 12 மணி வெயில் இருந்தாலும், பூமியை கிரகித்துக்கொண்டு வெளியே வெப்பம் விடும் நேரம் 2.45 மணிக்குதான். எனவே, வெயில் தற்போது அதிகரித்துள்ளதால், வெயில் நேரத்தில், பொதுமக்கள் வெயிலில் போகக்கூடாது.
செயற்கை மழையை உருவாக்க வேண்டுமானாலும் மேகங்கள் தேவைப்படும்.. வெயில் நேரத்தைவிட, மழை வரும்நேரத்தில், மேகங்களில் தூவினால், 10 அல்லது 10 சதவீதம் மழை கூடுதலாக கிடைக்கும்..
ஏரிகள்: அதேபோல, சென்னையில் இந்த முறை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு குறைவு.. ஏரிகளில் தண்ணீர் இருக்கவே செய்கிறது.. தென் மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு வராது.. ஆனால், வடஉள்மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை வரலாம்.. மே மாதம் பருவமழை நல்லாவே இருக்கும்..
மரங்கள் அதிகமாக அழிந்து, கட்டிடங்களின் பரப்பு அதிகரிக்கும்போது வெயில் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.. எனவே, மக்களும் அரசாங்கமும் இணைந்து இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்... ஒரு காரில் 4 பேர் செல்வதற்கு 4 கார்களை தனித்தனியாக பயன்படுத்தாமல், ஒரே காரை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் வாகன நெரிசலும் குறையும். பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தினாலும் வாகன நெரிசல் குறையும்.
குளுகுளு வீடு: வீடுகளில் மாடியில் வெள்ளை கலர் பெயிண்ட் அடித்தால், வீட்டின் உள்ளே உஷ்ணம் இறங்காது. தரைகளில் பூந்தொட்டிகள் வைக்க வேண்டும்.. நிறையச் செடிகள், மாடிகளிலும் செடிகள் வைத்து வளர்த்தால் எல்லாருக்குமே நல்லது" என்றார்.












Click it and Unblock the Notifications