அடித்து பெய்யப்போகும் மழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி, தேனி, நெல்லை மற்றும் தென்காசிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக இன்று காலை விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
27-03-2025 மற்றும் 28-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 01-04-2025 மற்றும் 02-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, 27-03-2025 மற்றும் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய
மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2" செல்சியஸ் உயரக்கூடும்.
வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 27-03-2025 மற்றும் 28-03-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 29-03-2025 முதல் 31-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3" செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று (27-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications