ரெட் அலர்ட்..சென்னையை விடுங்க! கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எங்கே தெரியுமா?
புதுச்சேரி: தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதன் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நாளை தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழையும் நாளை மறுநாள் அதிக கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் சார்பில் மழை காரணமாக பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதன் காரணமாக நாளை புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாளை கனமழை பெய்யும் என்பதால் புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல், புதுச்சேரியிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில ஆளுநர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் இருக்கும் தாழ்வான பகுதிகளை முன்னரே கண்டறிய வேண்டும், வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும், தங்கும் முகாம்கள் மருத்துவ முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் மழைக் காலங்களில் தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும், மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக அவற்றை அகற்றும் வகையில் மின் மோட்டார்கள், மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்றுவதற்காக மரம் வெட்டும் இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்களை தயார் செய்யும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications