Heavy Rain: அடுத்த 3 மணி நேரம்.. இடி, மின்னலுடன் 15 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது.. வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: Heavy Rain: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கோவை, திருப்பூர் நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் மழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு வரை 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் கூறியதாவது:-

heavy-rain-alert-thunderstorms-expected-in-15-tamil-nadu-districts-over-next-3-hours

15 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்

"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், நாகை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, தென்காசி, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கோவை, திருப்பூர் ஆகிய 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது" என வானிலை மையம் கூறியுள்ளது.

முன்னதாக இன்று மதியம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 25 ஆம் தேதி வாக்கில், ஒரிசா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

காற்றுடன் கனமழை வெளுக்கும்

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று எப்படி?

நாளை முதல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று (23-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (24-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+