Rain : சென்னையில் காலையில் வெயில்! மாலையில் பலத்த காற்றுடன் கனமழை! வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்!
சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதிக காற்றால் மழை சாரல் அடித்து நீரானது ஜன்னல், பால்கனி வழியாக வீடுகளுக்குள் வந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலை 4 மணி வாக்கில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து ஜில்லென்று காற்று வீசியது.

இதைத் தொடர்ந்து சென்னை முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, தாம்பரம், பாடி, செங்குன்றம், புழல் , மாதவரம், வியாசர்பாடி, ஆவடி திருமுல்லைவாயல், திருவேற்காடு, அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அது போல் கோயம்பேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, புதூர், கள்ளிக்குப்பம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனத்த மழை பெய்து வருகிறது.
இடி சப்தம் முழங்க, பலத்த காற்று வீசி வரும் நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழை குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெயிலால் வாடிய மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இந்த மழையால் பள்ளி, கல்லூரியை விட்டு வீடு திரும்பும் மாணவர்கள் அவதியடைந்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications