Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தமுறை மிஸ் ஆகாது.. நாளை கொங்கு மண்டலத்துல கொட்டப் போகுது கனமழை.. கோவை வெதர்மேன் அலெர்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: பெஞ்ச் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மேற்கு பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது. அதனால் கொங்கு மண்டலத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை மதியம் முதல் கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கோவை வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

rain kongu coimbatore

பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் கூட போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் அடுத்தடுத்து மூன்று மண் சரிவு சம்பவம் நிகழ்ந்ததில் தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 300 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிக கனமழை பெய்துள்ளது. பெஞ்சல் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மேற்கு பகுதி நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. இதன் காரணமாக மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

நீலகிரி, சேலம் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் இன்று (2.12.2024) மழை பெய்தது. இதன் காரணமாக சேலம் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து, சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்திருந்தது. பெஞ்சல் புயல் உருவாகும் போது கோவை 47 ஆண்டுகளில் முதல்முறையாக புயல் மழையை பார்க்கப் போகிறது என்று கோவை வெதர்மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் கூறியிருந்தார். இருப்பினும் இன்றுவரை கோவையில் பெரியளவுக்கு மழை பெய்யவில்லை.

அரசு மற்றும் தனியார் இரண்டு கணிப்புகளுக்கும் மாறாக கோவையில் இன்று வெயில் அடித்தது. இந்நிலையில் கொங்கு மண்டலத்துக்கு நாளை முக்கிய நாள் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் மழை குறித்து மீண்டும் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அந்த அறிவிப்பில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை (3.12.2024) மதியத்தில் இருந்து இரவு வரை கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்கு தகுந்த வகையில் மக்கள் தங்களின் வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.

இந்தமுறை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல வருகிற புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையும் கொங்கு மண்டலத்தில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் மேகங்கள் வேகமாக நகரும் என்பதால் மழை வேகமாக வந்து நின்றுவிடும். அதன் பிறகு மழை படிப்படியாக குறையும்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+