தொடர்ந்து பெய்யும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உட்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நாகை, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து டிட்வா புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து சென்னையையொட்டிய கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. ஆனாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது.
அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றினாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் அரக்கோணம், நெமிலி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தைகளை பாதுகாப்புடன் வீட்டிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications