அடுத்த மூன்று நாட்கள்.. கொங்கு மண்டலம் குளிரப் போகுது.. கொட்டித் தீர்க்க போகுது மழை
கோவை: கோடை காலம் முடிந்தும், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. இந்நிலையில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டப்போவதாக கோவை வெதர்மேன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலகட்டம். நவம்பர் மாதத்தில் தான் பருவமழை தீவிரமடையும். ஆனால், இந்தாண்டு அக்டோபர் மாதம் முதலே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதுமே, கடந்த சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்த ஒரு வாரத்துக்கு, தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையிலும் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் இதை உறுதிபடுத்தியிருந்தார். இதுகுறித்து பிரதீப் ஜான் தன் எக்ஸ் தள பக்கத்தில், சென்னையில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. அடுத்த 3-4 நாட்களில் கனமழை பெய்யவுள்ளது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் தான் சென்னையில் கனமழை பெய்யும்.
இந்தமுறை அதே மாதிரியான மழை அக்டோபர் மாதமே மழை பெய்ய வாய்ப்புள்ளது அதாவது வருகிற 14ம் தேதி கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. என கூறியுள்ளார். இதனால் அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு சிறந்த க்ளைமேட் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.
முக்கியமாக கோவையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து சில்லென்ற கிளைமேட் நிலவி வருகிறது. இந்த கிளைமேட் மேலும் சில நாட்களுக்கு தொடர உள்ளதாக மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கோவை வெதர்மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் க்ரிஷ் வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே மன்னார் வளைகுடா பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்றிலிருந்து (11.10.2024), வருகிற செவ்வாய்க்கிழமை (15.10.2024) வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு அதிகரிக்கும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இன்று முதல் மழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய மூன்று தினங்களுக்கு மிக கனமழை வாய்ப்பும் உண்டு.
அக்டோபர் 16 மற்றும் 17 தேதியிலிருந்து கொங்கு மண்டலத்தின் மழை வாய்ப்பு குறைய தொடங்கும். மீண்டும் இந்த மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications