மலைப் பாதைகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு! தமிழக- கேரளா சாலைகள் துண்டிப்பு- ஐயப்ப பக்தர்கள் தவிப்பு!
தேனி: தமிழகம்- கேரளா இடையேயான மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் இரு மாநில சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை செல்லும், சபரிமலையில் இருந்து திரும்பும் ஐயப்ப பக்தர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
தென் தமிழ்நாட்டை கடந்த 24 மணிநேரமாக பெருமழை புரட்டி எடுத்து வருகிறது. ஒரு ஆண்டு முழுவதும் பெய்திருக்க வேண்டிய மழை ஒரே நாளில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 93 செ.மீ அளவு கொட்டித் தீர்த்திருக்கிறது. இந்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருநெல்வேலி மாநகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இப்பெருமழையால் பல பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதே போல விருதுநகர், தேனி, சிவகங்கை மாவட்டங்களிலும் மழை கொட்டியது. திண்டுக்கல் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் தேனியில் இருந்து கேரளா செல்லும் மலைப் பாதையில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கக் கூடியவைதான் 3 சாலை பகுதிகளும். கேரளா செல்லக் கூடிய இந்த 3 சாலைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு- கேரளா இடையேயான முதன்மையான தென்மாவட்ட சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது நிலச்சரிவை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த சாலை துண்டிப்பால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தமிழ்நாடு திரும்ப முடியாமல் குமுளியில் தவித்து வருகின்றனர். அதேபோல சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் தேனி பகுதியில் தவிக்கின்றனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications