சென்னையில் 2 நாளைக்கு இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு (Tamil Nadu Weather Update) வாய்ப்பு உள்ளது எனவும், வரும் 16 ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிவகங்கை, ராணிப்பேட்டை, பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆரம்பத்தில் தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து வட மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் வரும் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 10-08-2025 முதல் 14-08-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 10-08-2025: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11-08-2025: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12-08-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13-08-2025 மற்றும் 14-08-2025: தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications