அடுத்த வாரம் கனமழை! எந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
சென்னை: வெப்பச் சலனம் காரணமாகவும் காற்று குவிதல் காரணமாகவும் வட தமிழ்நாட்டில் அதிக மழை பெய்துவருவதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.
சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த சில தினங்களாகவே திடீர் மழை பெய்து வருகிறது. ஒரே பகுதியில் தொடர்ந்து நிற்காமல் 2 மணிநேரத்திற்கும் அதிகமாக மழை பெய்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதுவரை வட தமிழ்நாட்டில் 10செமீட்டரில் இருந்து 15செமீட்டர் வரை மழைப் பதிவாகியுள்ளது.

காலை பளீர் என்று வெயில் அடிக்கும்போதே திடீரென்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, மழை பெய்ய ஆரம்பித்துவிடுகிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்னும் பருவமழை தொடங்கவே இல்லை. அதற்கு முழங்கால் அளவு மழை நீர் தேங்க ஆரம்பித்துவிடுகிறது. கடந்த ஆண்டு மழையில் மூழ்கிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த மழையைப் பார்த்தே அச்சப்படத் தொடங்கிவிட்டனர். மீண்டும் சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கி விடுமா எனக் கவலையில் உள்ளனர்.
காலையில் மழை மூட்டமாக தெரியும் மேகங்கள், மாலை நேரத்தில் அதிக உஷ்ணத்தை உண்டாக்கி வருகின்றன. வீட்டிற்குள் இருக்க முடியாத அளவுக்கு உடல் வேர்த்துக் கொட்டுகிறது. மாலை 6 மணிக்கு மேல் ஏசி இல்லாத வீடுகளில் உள்ள மக்கள் பெரிய அவதிக்கு ஆளாகி வருகின்றன. இந்த வானிலை மாற்றத்திற்கு என்ன காரணம்? எல் நினோ என்பதன் விளைவா இது? எனப் பல கேள்விகளுக்கு முறையாக விளக்கம் அளித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீதர்.
அவர், “தென்மேற்கு பருவமழைக் காலங்களில் சாதாரணமாக ஒரு தொய்வு நிலை இருந்தால், சமவெளிப் பகுதிகளான வட மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதைக் காண முடியும். கடந்த 10 நாட்களுக்கு மேலாகப் பருவமழையில் ஒரு தொய்வு நிலை இருப்பதைக் கணிக்க முடிகிறது. அதன் காரணமாகவே வட தமிழ்நாட்டில் அதிக அளவில் மழை பெய்துவருகின்றது.
ஆகவேதான் கரையோர பகுதிகளில் அதிக மழை இல்லை. கிழக்கு கரையோரப் பகுதிகளில் உள்ள உட்புற மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரித்துள்ளதை நாம் பார்க்கிறோம். இந்த மழை இடியுடன் கூடிய மழையாகவே இருக்கும். மேலும் காற்று குவிதல் காரணமாக சில மாவட்டங்களில் அதீத மழை பெய்து வருவதைக் காண முடிகின்றது.
இதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், மேகக் கூட்டங்களின் நகர்வு மிகவும் மெதுவாக உள்ளது. இதனால்தான் ஓரிடத்தில் மழை தொடங்கினார் தொடர்ந்து அதே இடத்தில் 1 அல்லது 2 மணிநேரம் தொடர்ந்து பெய்யக் கூடிய நிலை நீடிக்கிறது. காற்று மேற்கு நோக்கி நகரும் போது இது படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். மேற்கு உட்புற மாவட்டங்களில் அதனால் மழை அதிகம் பெய்யலாம் எனக் கணிக்க முடிகிறது.
அதாவது கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் மழையின் தாக்கம் அதிகரிக்கலாம். இதனால் வட கடலோர பகுதிகளில் மழையின் தாக்கம் குறையக் குறையலாம். பருவமழையில் குறைந்தது 10 நாட்கள் தொய்வு நிலவும் எனத் தெரிகிறது. அதனால் வெப்பச் சலனமும் நீடிக்கும். அதன் பாதிப்பால் மழையும் அதிகமாகவே இருக்கும்.
தென்மேற்கு பருவமழைக்கும் நமது வடகிழக்கு பருவமழைக்குச் சம்பந்தம் இருக்காது. வழக்கமாகத் தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டை அடைவதன் மூலமே விடைபெறும். அப்போதுதான் வடமேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படும். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் பருவமழை வலுப்பெறக் கூடிய சூழல் உள்ளது.
அதனால் 2 அல்லது 3 வாரம் தென்மேற்கு பருவமழை சற்று வலுவாகவே இருக்கும். அதன்பின்னர் வடகிழக்கு பருவமழையில் தாமதம் ஏற்படுமா? இல்லையா என்பதை அப்போதுதான் கணிக்க முடியும்” என்கிறார்.












Click it and Unblock the Notifications