இந்தா வந்துட்டாங்கள்ல..சென்னையில் ஆரம்பித்தது இடி, மழை! விடாமல் அடிச்சு ஊற்றும் வானம்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மழை தொடங்கி இருக்கிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதன் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நாளை தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழையும் நாளை மறுநாள் அதிக கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் நாளை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னையை நோக்கி இடி மழை பயணித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தாம்பரம் தாம்பரம் சோழிங்கநல்லூர் கடந்த மழை மேகங்கள் தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை ,வேளச்சேரி, நெற்குன்றம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதே போல சென்னையின் அண்ணா சாலை, தி நகர், சைதாப்பேட்டை, கிண்டி, திருவல்லிக்கேணி, அசோக் நகர், ஜாஃபர்கான் பேட்டை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில்பலக்க காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அதே நேரத்தில் மழை நீரை வெளியேற்றுவதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விட வாய்ப்புள்ளதால் அவற்றை உடனடியாக வெட்டி அகற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கண்ணைப் பறிக்கும் மின்னல் விழ தொடங்கியுள்ளது. இதனால் பலத்த இடி சத்தமும் கேட்டு வருவதால் மக்கள் வெளியே வரவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications