10 மணி வரை ரொம்ப முக்கியம்! வெளுத்து கட்ட போகும் வருண பகவான்! ’இந்த’ ஊர் காரங்க அலர்ட்டா இருக்கனும்!
சென்னை: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு பத்து மணி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் நாளை மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இன்று 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து. வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இதன் காரணமாகதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுன முதல் மிக கனமழையும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, விழுப்புரம். கடலூர். மயிலாடுதுறை, இருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி திருப்பத்தூர், தர்மபுரி. சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.
இந்த நிலையில் இன்று இரவு பத்து மணி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியில் உள்ள அறிவிப்பில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல லேசான இடி மின்னலுடன் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை , விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என ஆரஞ்சு அலட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளை மழை நீர் தேங்கலாம் எனவும், போக்குவரத்து பாதிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications