சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை.. கொஞ்ச நேரத்தில் 100 மில்லி மீட்டர்.. வானிலை ஆய்வாளர்கள் தகவல்
சென்னை: சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தற்போது நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே 20-30 மிமீ பெய்துள்ள நிலையில், நகரின் மேற்கு புறநகர் பகுதிகளில் ஏற்கனவே 60-70 மிமீ மழை பதிவாகியுள்ளது என்றும், கண்டிப்பாக 100 மில்லி மீட்டர் மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவில் தொடர்ச்சி மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் மழை பெய்த நிலையில் இன்று கனமழை பெய்கிறது . சென்னையில் அம்பத்தூர், ஆவடி தொடங்கி,கிழக்கே பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கிண்டி, வேளச்சேரி மடிப்பாக்கம் வரையிலும் கனமழை பெய்திருக்கிறது.

இதேபோல் சென்னை எழும்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, புரசைவாக்கம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா நகர், சூளைமேடு உள்பட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல்வேறு சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி வருகிறது. கனமழை காரணமாக மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
இந்த மழை குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தற்போது நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே 20-30 மிமீ பெய்துள்ள நிலையில், நகரின் மேற்கு புறநகர் பகுதிகளில் ஏற்கனவே 60-70 மிமீ மழை பதிவாகியுள்ளது என்றும், கண்டிப்பாக 100 மில்லி மீட்டர் மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதிவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர். அதேநேரம் சென்னையை தவிர தமிழ்நாட்டில் வேறு எங்குமே மழை பெய்யவில்லை
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications