வரலாறு காணாத மழை! மடமடவென நிரம்பிய அணைகள்.. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்மட்டம்.. லிஸ்ட் இதோ
நெல்லை: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் மடமடவென உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தற்போது நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே கனமழை பெய்ய தொடங்கியது. விடாமல் சுமார் 38 மணி நேரமாக நிற்காமல் பெய்த மழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குளங்கள், ஏரிகள் ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில், தற்போது பெய்த மழையினால் குளங்கள், ஏரிகளின் மடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், வயல்களுக்குள்ளும் புகுந்தது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் மடமடவென உயர்ந்தது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள நிலவரப்படி அணைகளில் எவ்வளவு நீர் உள்ள்து என்பதை இங்கே பார்க்கலாம்.
பாபநாசம் அணை: பாபநாசம் அணையின் மொத்த கொள்ளவான 143 அடியில் தற்போது அணையில் நீர் இருப்பு 134 அடி கடந்துள்ளது. 90.55 சதவிகிதம் அணை நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அதாவது 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேர்வலாறு அணை: சேர்வலாறு அணையின் மொத்த கொள்ளவான 156 அடியில் அணையின் நீர் இருப்பானது தற்போது 143.17 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

மணிமுத்தாறு அணை: மணிமுத்தாறு அணையின் மொத்த நீர் கொள்ளளவு 118 அடியாகும். அணையில் தற்போது நீர் இருப்பு 109.15 அடியாக உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடக்கு பச்சையாறு: வடக்கு பச்சையாறு அணையின் மொத்த கொள்ளவு 49.20 அடியாகும். அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து 751 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நம்பியாறு அணை: நம்பியாறு அணையின் மொத்த கொள்ளளவு 22.96 அடியாகும். இந்த அணையிலும் முழு கொள்ளளவை நீர் எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அதாவது வினாடிக்கு 3420 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications