சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் தாமதம்.. பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட 4 விமானங்கள்!
சென்னை: சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரையிறங்கின. மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகரில் மேக வெடிப்பால் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வடபழனி, கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. அண்ணா நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

சென்னை மீனம்பாக்கம், வண்டலூர், தாம்பரம், சேலையூர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. வட சென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டையில் கனமழை வெளுத்து வாங்கியது. மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டியது.
இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நகரின் மணலி, விம்கோ நகர் போன்ற பகுதிகளில் அதிகனமழை பெய்தது அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ, விம்கோ நகரில் 26 செ.மீ, கொரட்டூர் 18 செ.மீ, கத்திவாக்கம் 14 செ.மீ, திருவொற்றியூரில் 13 செ.மீ, பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரையிறங்கின. மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், இலங்கை, துபாய், குவைத் உள்ளிட்ட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர்.












Click it and Unblock the Notifications