இந்த தடவை ஏமாற மாட்டோம்.. வெள்ளத்திற்கு தண்ணி காட்டும் சென்னையன்ஸ்! டூவீலர்கள் எங்க நிக்குது பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கார்களை மக்கள் மேம்பாலங்களில் நிறுத்தி வைத்தனர். "காருக்கு அப்படி என்றால், பைக்குகளுக்கு வேற ஒரு ஐடியா இருக்கு" என்று சொல்கிற வகையில், டூவிலர்களை மக்கள் தங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டின் மேல் தளத்திற்கும், மொட்டை மாடிக்கும் லிப்டுகளில் கொண்டு சென்று பார்க்கிங் செய்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை நள்ளிரவு வரை பெய்தது. இடையில் கொஞ்சம் விட்டு பிடித்த மழை மீண்டும் காலை 10 மணி முதல் வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.

chennai rain chennai

சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை விடாது பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளரும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதீப் ஜான் கூறுகையில், " சென்னையில் அடுத்த 3 நேரத்திற்கு அதிக மழை பெய்ய உள்ளதால் அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் வீட்டிற்கு செல்லுங்கள் . நாளை இன்னும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

chennai rain chennai

சென்னையில் இன்று இரவு முதல் சில இடங்களில் 200 மி.மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். தொடர் மழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் கூட முட்டியளவு தண்ணீர் ஓடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், வீடுகளின் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

chennai rain chennai

இதனால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்களில் காரை நிறுத்தி வைத்தனர். மேம்பாலத்தின் இரு பக்கமும் கார்களை வரிசையாக நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தலையும் மீறி வாகன ஓட்டிகள் அங்கே கார்களை விட்டு சென்றதை காண முடிந்தது. .

கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவது போல, பைக்குகளை அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திற்குகொண்டு போய் குடியிருப்பு வாசிகள் பலரும் நிறுத்தி வைத்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் பைக் வெள்ளத்தில் மூழ்கி பழுதாகிவிடும் எனக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லிப்ட்டில் ஏற்றி வீட்டிற்குள்ளும், வீட்டின் முன்பாக காரிடரில் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. காருக்கு மேம்பாலம் என்றால், பைக்கிற்கு அப்பார்ட்மெண்ட் மேல் தளம் என நெட்டிசனக்ள் பலரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த முறை ஏமாறவே மாட்டோம்.. என சென்னை மழை வெள்ளத்துக்கு தண்ணி காட்டும் வகையில் இருசக்கர வாகனங்களை அப்பார்ட்மெண்டின் மேல் தளத்தில் பார்க்கிங் செய்துள்ளனர்.

சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாளையும் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+