திருவண்ணாமலையை நனைத்த மழை! சேலத்தை கூட விட்டு வைக்கல.. இப்படி பெய்யுதே!
சென்னை: இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், தற்போது மேற்கு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. சற்று முன்னர் விடுக்கப்பட்டிருந்த வானிலை எச்சரிக்கையில், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று வரை தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 323.7 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலத்தில் செய்ய வேண்டிய மழையுடன் இதை ஒப்பிடும்போது மூன்று சதவீதம் அதிகமாகும். அதேபோல அரியலூர் 9%, சென்னை 33%, கோயம்புத்தூர் 39%, கடலூர் 17%, மயிலாடுதுறை 85%, நீலகிரி 13%, ராணிப்பேட்டை 49%, தென்காசி 58%, தஞ்சாவூர் 10%, தேனி 11%, திருநெல்வேலி 263%, திருப்பத்தூர் 24%, திருவள்ளூர் 36%, திருவண்ணாமலை 12%, திருவாரூர் 14%, வேலூர் 40%, விழுப்புரம் 20% என மழை கூடுதலாக பெய்திருக்கிறது.
சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 சதவீதம் மழை குறைவாக செய்திருக்கிறது அதேபோல தர்மபுரி 20%, திண்டுக்கல் 38%, ஈரோடு 23%, கள்ளக்குறிச்சி 29%, கரூர் 31%, கிருஷ்ணகிரி 14%, மதுரை 21%, நாகப்பட்டினம் 19%, நாமக்கல் 29%, ராமநாதபுரம் 45%, சேலம் 14%, தூத்துக்குடி 59%, திருச்சி 23%, விருதுநகர் 43% அளவுக்கு மழை இளமையுடன் குறைவாக பெய்திருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications