Heavy Rain: ராமேஸ்வரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
சென்னை: கனமழை காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரியலூர், கோவை, கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் நண்பகல் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications