மழை புரட்டி எடுத்த போதும்.. வழங்கப்பட்ட மின்சாரம்.. செந்தில் பாலாஜி செய்த 6 முக்கிய மூவ்தான் காரணம்
சென்னை: சென்னையில் மழை புரட்டி எடுத்த போதும் கூட மின்சாரம் இடைவிடாமல் வழங்கப்பட்டது. சில இடங்களில் 1- 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
ஆனா ல் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது. சென்னையில் பொதுவாக லேசாக மழை பெய்தாலே மின்சாரம் தடை ஆகும். ஆனால் கடந்த 2 நாட்களாக கனமழைக்கு இடையிலும் கூட மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியமும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் முறையாக வகுத்த சில திட்டங்கள்தான் இதற்கு முக்கிய காரணம். அவை என்னென்ன முடிவுகள், திட்டங்கள் என்று இங்கே பார்க்கலாம்.
1. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 1 மாதமாகவே.. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பராமரிப்பு பணிகள் எல்லாம் செய்யப்பட்டு தயாராகவைக்கப்பட்டு இருந்தன.
2. செந்தில் பாலாஜி அமைச்சரான 3 வருடங்களுக்கு முன்பே சாலை ஓரம் உள்ள மின்சார பாக்ஸ்களை உயரப்படுத்த சொன்னார். பாக்ஸ்கள் அனைத்தும் உயரமான இடத்தில் சிமெண்ட் தளம் மூலம் மாற்றப்பட்டது.
3. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கினாலும் மின்சார தடை இருக்காது.
4. மின்சார உதவி மையம் 24*7 சிறப்பாக செயல்பட்டு மின் தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்பட்டது. வந்த புகார்களும் உடனடியாக கவனிக்கப்பட்டன.
5. மின்சார ஊழியர்கள் தங்கள் ஏரியாக்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். இதனால் மின் தடை குறித்து உடனே அறியப்பட்டு.. அவை சரி செய்யப்பட்டது.
6. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளிடம் பணியை விடாமல் நேரடியாக பணிகளை கண்காணித்தார். கடந்த ஒரு வாரமாகவே இந்த மழைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எப்படி தப்பித்தது?: சென்னைக்கு வந்த பிரச்சனை பாதியில் வெளியேறி உள்ளது. இதற்கு காரணம்.. காற்றழுத்த தாழ்வு மையம் கிழக்கு பக்கமாக புதுச்சேரியில் இருந்தது. அங்கிருந்து வட மேற்கு திசையில் நகர தொடங்கி உள்ளது. 10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது தொடர்ந்து வடக்கு திசையில் நகரும். இப்படி நகர நகர.. மேகங்கள் ஆந்திர பிரதேசம் நோக்கி நகரும். ஆந்திர பிரதேசம் நோக்கி மேகங்கள் செல்லும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications