பூமியிலிருந்து கிளம்பி இருக்கும்! மாபெரும் உயிர் சேதங்களை தவிர்த்த அரசின் ஒரு முடிவு! செம ஸ்மார்ட்
சென்னை: தமிழ்நாடு அரசின் ஸ்மார்ட் முடிவு ஒன்றின் காரணமாக சென்னையில் ஏகப்பட்ட உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளன.
சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் மழை காரணமாக நிறுத்தப்பட்ட மின்சாரம் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இன்னும் வெள்ளம் விடியவில்லை.

என்ன ஸ்மார்ட் முடிவு: இதனால் கொஞ்சம் கொஞ்சமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் வழங்குவதில் பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது. இதில் அவர்கள் மேற்கொண்ட ஸ்மார்ட் திட்டமிடல் ஒன்று சென்னை மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது.
1. சென்னையில் வெள்ளம் இருப்பதால் உடனுக்குடன் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சாலையாக தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
2. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வயர்கள் சாலைக்கு கீழே உள்ளன. அண்டர்கிரவுண்ட் வயர்கள் சேதம் அடைந்துள்ளதா.. சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .
3. இதை பார்க்காமல்.. அப்படியே மின்சாரம் தர முடியாது. இதற்கு முதலில் தண்ணீர் வடிய வேண்டும். இதற்காக தெரு தெருவாக சோதனை செய்து படிப்படியாக மட்டுமே மின்சார வழங்கப்பட்டது.
4. பொதுவாக இது போன்ற நேரங்களில் எல்லா தெருக்களையும்.. சிறு சிறு தெருக்களாக இருந்தாலும் சரி.. சோதனை செய்யாமல் மின்சாரம் வழங்கினால் பூமியில் இருந்து மின்சார பூதமே கிளம்பி இருக்கும். அதாவது கீழே உள்ள வயர்கள் தண்ணீரில் பட்டு பல இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருக்கும்.
5. இதனால் பெரிய அளவில் உயிர் சேதங்களும் கூட ஏற்பட்டு இருக்கும். ஆனால் அப்படி எந்த விதமான உயிர் சேதங்களும் சென்னையில் ஏற்படவில்லை.
6. மின்சார தாக்குதல் காரணமாக ஒரு உயிர் இழப்பு கூட ஏற்படாமல் தமிழ்நாடு அரசு மக்களை காப்பாற்றி உள்ளது. மின்சாரத்துறையின் ஸ்மார்ட் திட்டமிடல் இதற்கு காரணம்.
துணை மின் நிலையங்கள்: துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது, பொது மக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். நேற்று (04.12.2023) காலை 12 மணி நிலவரப்படி 112 மெகாவாட் ஆக இருந்த சென்னை நகரின் தேவை இன்று (05.12.2023) மாலை 7:30 மணி நிலவரப்படி 1,488 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, சென்னை மாநகரத்தின் மையப்பகுதிகளில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 1,812 மின்னூட்டிகளில் (FEEDERS) 1,610 மின்னூட்டிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 மின்னூட்டிகளை (FEEDERS) சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசின் முக்கிய தகவல்: சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அன்னை நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், அரும்பாக்கம், ஆவடி, காமராஜ் நகர், கொரட்டூர். மேனாம்பேடு. நொளம்பூர். கள்ளிக்குப்பம், ஜெ.ஜெ. நகர். சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர், கோயம்பேடு மார்க்கெட், மதுரவாயல், முகப்பேர் கிழக்கு, புழல், ஆர்.வி. நகர், டி.ஐ. சைக்கிள், அண்ணா நகர் மேற்கு ஆகிய இடங்களின் ஒரு பகுதி, சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணாசாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பேப்பர் மில்ஸ் ரோடு, கொருக்குப்பேட்டை, திருவற்றியூர், CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர் பெரியார் நகர் ஆகிய இடங்களின் ஒரு பகுதிகள், சென்னை தெற்கு - | மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகர், கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, என்றுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications