அந்தமான்ல ஒன்னு! வங்க கடலில் 2! மொத்தம் 3 சுழற்சி! ஒரு புயல் வேற! தமிழகத்தில் எங்கு மழை பெய்யும்?
சென்னை: 3 காற்று சுழற்சிகளும் ஒரு புயலும் சேர்ந்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் நல்ல மழையை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும். அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 1ஆம் தேதி புயலாக மாறும். இன்று மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என்றும் எதனால் இப்படி மழை கொட்டுகிறது என்பதும் பலரது மனதில் எழும் கேள்வியாக உள்ளது.

மாலத்தீவு பகுதிகளில் காற்று சுழற்சியானது உருவாகியுள்ளது. அதே போல் இலங்கையையொட்டியுள்ள கடல் பகுதியிலும் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இவை இரண்டும் இன்றும் நாளையும் மழையை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் மாலத்தீவில் உருவான காற்று சுழற்சி கீழடுக்கு சுழற்சியாகவே நகர்கிறது. இதனால் வங்கக் கடல் பகுதிகளில் கலந்து கடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுக்கும். தெற்கு மத்திய வங்கக் கடலிலும் ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது வட கடலோர தமிழகத்தில் மழையை கொடுக்கும். இதன் மூலம்தான் இரு நாட்களுக்கு மழை பெய்யும்.
மத்தியிலும் ஒரு காற்று சுழற்சி உள்ளது. இது தொடர்ந்து வடகடலோர பகுதிகளில் மழையை கொடுக்கும். இந்த 3 சுழற்சிகளும் தான் இன்றும் நாளையும் மழையை கொடுக்கும் வாய்ப்புள்ளது. சென்னை, புதுவை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது. இதன் பிறகு திருச்சி, திண்டுக்கல்லிலும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்யும்.
காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகரும் போது கோவையில் இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்யும். நள்ளிரவு நேரத்தில் ராமநாதபுரம், விளாத்திக்குளம் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்திற்கு மழையை கொடுக்கும். இது புயலாக உருவானால் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications