வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்! ஜனவரி வரை அடித்து ஆடும் பேட்டர்ன்! வானிலை ஆய்வாளர் சொல்வது என்ன?
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பொழிவு இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்திற்கு மிக பெரிய மழைப் பொழிவை கொடுக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் என்பவர் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம், இயல்பைக் காட்டிலும் மழை இருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறது.

நீண்ட கால வானிலை டேட்டாக்களை பார்த்தாலும் அதைத்தான் காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இதே மாதிரி இருக்கக் கூடிய ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால் மழை இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
2024 ஆம் ஆண்டை போல் 1964, 2005, 2010, 2016, 2020 ஆகிய ஆண்டுகள் இருந்துள்ளன. இந்த ஆண்டுகளில் எல்லாம் மழை பொழிவு அதிகமாவே இருந்தது. இந்த ஆண்டுகளில் ஏதோ ஒரு நிகழ்வுகள் அந்தந்த ஆண்டுகளை ஹைலைட்டாக வைக்கும் அளவுக்கு இருந்துள்ளன. உதாரணமாக 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் வந்த புயல், 2005 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பெருவெள்ளம் இருந்தது.
2010 இல் சென்னையில் மழை இல்லாவிட்டாலும் இயல்புக்கு அதிகமாக 80 சதவீதம் அதிக மழை பெய்தது. 2016ஆம் ஆண்டு சென்னையில் வர்தா புயல் வந்தது. அது போல் மழை மிகவும் குறைந்த ஆண்டுகளும் இருந்துள்ளன. ஆனால் 2024 ஆம் ஆண்டு நல்ல மழை பெய்யலாம் என்பதைத்தான் பேட்டர்ன்கள் சொல்கின்றன.
வடகிழக்கு பருவமழை என்றாலே இந்திய வானிலை மையத்தை கேட்டால் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் என்பார்கள். ஆனால் விவசாயிகள், மார்கழியில் மழை வராது என்பார்கள். ஆனால் லாலினோ ஆண்டை பொருத்தமட்டில் ஜனவரி மாதம் மழையை பார்க்கலாம். ஏற்கெனவே இருக்கும் டேட்டாக்களை வைத்து பார்த்தால் லாலினோ ஆண்டுகளில் ஜனவரியில் மழை பெய்துள்ளது.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியில்தான் தனுஷ்கோடி புயல் வந்தது. 2011 ஆம் ஆண்டும் லாலினாதான். அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஒட்டி தானே புயல் வந்து புதுவையில் சேதத்தை ஏற்படுத்தியது. எனவே லாலினோவை பொருத்தவரை ஜனவரி வரை மழை தொடரக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
வங்கக் கடலும் அரபிக் கடலும் வெப்பம் அதிகம் இருக்கக் கூடிய கடல் பகுதிகளாகும். இந்தியாவை சுற்றி கடலின் வெப்பநிலை அதிகமாக உயர்ந்திருக்கிறது. கடல் வெப்பநிலை அதிகமாகும் போது மழையின் தன்மை மாறும். சில மணி நேரங்களில் அதிக மழை பெய்வது என்பது கடலின் வெப்பத்தால் ஏற்படுகிறது. இந்த ஆண்டு இதே போல் இருக்கும்.
லா லினோ ஆண்டுகளில் குறைந்த காற்றழுத்தம் முதல் புயல் வரை இயல்புக்கு அதிகமாகவே இருக்கும். மேற்கு பக்கம் , வடமேற்கு பக்கம் புயல் நகர்ந்தாலோ புயல் கரையை கடந்தாலோ தமிழகத்திற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். தமிழகத்திற்கு புயலுக்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் என்பதால் நாம் அதற்கு தயாராக இருத்தல் வேண்டும். சென்னையில் இந்த ஆண்டு மிக அதிக கனமழை இருக்கும். இந்த ஆண்டு 5 முதல் 7 வெப்பச்சலனங்கள் உருவாகும். அதில் 2 அல்லது 3 புயல்களாக மாறும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications