நடுசென்டரில் நங்கூரமிட்ட காற்றழுத்தம்! சென்னையை நோக்கி படு ஸ்லோவாக நகர்வு! எங்கு கரையை கடக்கும்?
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை கடற்கரையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? எப்போது எங்கே கரையை கடக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது மேற்கு- வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி கடற்பகுதியில் மையத்தில் நிலை கொண்டுள்ளது. அதாவது சென்னையிலிருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் 360 கி.மீ. தூரத்திலும் புதுவையில் கிழக்கு திசையில் 390 கி.மீ. தூரத்திலும் நெல்லூரில் தென் கிழக்கு பகுதியில் 450 கி.மீ. தூரத்திலும் காற்றழுத்தம் மையம் கொண்டுள்ளது.
இது அநேகமாக மேற்கு வட மேற்கு பகுதியை நோக்கி நகரும். வடதமிழகம்- தெற்கு ஆந்திரம் இடையே புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே நாளை காலை கரையை கடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி,கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
அது போல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கரையை கடக்கும் போது மணிக்கு 35 கி.மீ முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும்.

வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. நேற்று முன் தினம் முதலே சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்தது. அது போல் செம்பரம்பாக்கத்திற்கு தண்ணீரும் வந்ததால் மக்கள் சற்று அச்சமடைந்தனர். எனினும் சென்னை மாவட்ட நிர்வாகம் அவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் ஒரு நாள் பெய்த மழைக்கே ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களை இன்னலுக்குள்ளாக்கியது. இது வெறும் டிரெய்லர்தான் என்றும் மெயின் பிக்சர் இனிதான் என்றும் பல வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஒரு நாள் மழைக்கே சென்னை மக்கள் மார்க்கெட்டையே காலி செய்துவிட்டார்கள். எல்லா பொருட்களை வாங்கி இருப்பு வைத்துவிட்டார்கள். இனி அடுத்தடுத்து காற்றழுத்தங்களும் புயல்களும் உருவாகினால் சென்னை எப்படி தண்ணூரில் தத்தளிக்குமோ என்பதை நினைத்தாலே கண்களில் நீர் கசிகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications