போஸ்டர் அடி..வருண பகவான் ரெடி! சுழலும் சக்கரம்..சூளும் கருமேகம்! இந்த நாளில் மழை கன்பாஃர்ம்..!
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 12 மற்றும் 14ம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலில் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் வெப்ப அலை தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

அதிகாலை நேரங்களிலேயே வீட்டில் தங்கி இருக்கும் மக்கள் புழுக்கத்தை உணர முடிகிறது. மேலும் காலை 7 மணியிலிருந்து வெப்பத்தின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதனால் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்பம்: தமிழகத்தில் வெப்ப அலை வீசிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை நூறு டிகிரி பாரஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அதிக இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது. இன்றும் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை இல்லாவிட்டாலும் வெப்ப நிலை அதிகரிக்கும், தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் இன்று கூடுதல் வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையமானது எச்சரித்து இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 12 மற்றும் 14ம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கீழடுக்கு சுழற்சி: இன்று முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நூற்றி ஆறு டிகிரி பாரன்ஹீட்டும் இதர சமவெளப் பகுதிகளில் 12 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகலாம் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் 15ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஐஎம்டி: குறிப்பாக 12 மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கோவை, நெல்லை, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பொழிவு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications