இன்னொரு ரவுண்டு! அடுத்த 3 நாட்களில்.. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
சென்னை: வங்கக்கடலில் ஏற்கெனவே உருவான புயல் சின்னம் வலுவிழந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 3 நாட்களில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், “நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.25) காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.
எனவே இன்று (டிச.25) வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.26 மற்றும் டிச.27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.28 முதல் டிச.31 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வரை தமிழ்நாட்டில் சராசரியாக 57.6 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த நாட்களில் 43.6 செ.மீதான் பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் இயல்பை விட 32% கூடுதலாக மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85%, திருபத்தூர் மாவட்டத்தில் 84%, விழுப்புரம் 65%, சேலம் 62%, திருநெல்வேலி 61%, தருமபுரி 59% என மழை பெய்திருக்கிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த அக்.1ம் தேதி தொடங்கி இன்று வரை 104.6 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications