ரெடியா! கொட்ட போகுது கனமழை.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது! எங்கே நகர்கிறது! முக்கிய தகவல்
சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை நகர்ப் பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்றைய தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதற்கிடையே இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதியில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் இது ஒடிசா சத்தீஸ்கர் நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. அடுத்த 2, 3 நாட்களுக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா, கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எங்கே மழை: ஜார்கண்ட், உத்தரகண்ட், மேற்கு மத்தியப் பிரதேசம், கங்கை நதி மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் என்ன கிளைமேட்: தென்னிந்தியாவைப் பொறுத்தவரைத் தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதேபோல தெலுங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications