வங்கக்கடலில் ‘சிவப்புக் கண்’.. 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்த மாதம் முழுக்க?
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. செப்டம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இந்த மாதம் தொடங்கியது முதலே தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக மழை போக்கு காட்டி வந்த நிலையில், கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதேபோல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல் வடமாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மர் கடற்கரையை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிமீ மற்றும் 7.6 கிமீ உயரத்தில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியானது உயரத்துடன் தென்மேற்கு திசையில் சாய்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மகாராஷ்டிராவை நோக்கி நகர்ந்து, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும், அக்டோபரில் திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி வருவதால், இன்று (செப்டம்பர் 12) முதல் ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் மறறும் வடகிழக்குப் பகுதிகளிலும் அடுத்த மூன்று நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அதன்பிறகு குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications