அரபிக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம்! இந்தியாவுக்கு பாதிப்பு இருக்குமா? வானிலை மையம்
சென்னை: மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் மட்டத்திற்கு மேல் 5.8 கி.மீருக்கு தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 3 நாட்களில் அனேகமாக மேற்கு முதல் வடமேற்கு திசையில் தென் கிழக்கை நோக்கி நகரும்.

மேலும் மத்திய கிழக்கு அரபிக் கடலோரத்தை ஒட்டிய பகுதிகளிலும் இந்த சுழற்சி நகரும். இதனால் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நவம்பர் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் புயல்கள் உருவாக சாதகமான சூழல் நிலவும்.
அதே நேரத்தில் அரபிக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ புயலாகவோ மாறும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே தீவிரமடைய வாய்ப்பிருக்கிறது. இந்திய கடற்கரையிலிருந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு இருக்கிறது.

இதனால் இந்தியாவுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. அரபிக் கடலுக்கு வடமேற்கு பகுதிகளில்தான் வானிலையில் மாற்றங்கள் ஏற்படும். அரபிக் கடலில் உருவாகும் வானிலை அமைப்பு 20 முதல் 30 சதவீதம் தெற்கு குஜராத் அல்லது வட மகாராஷ்டிரா பகுதிகளை நோக்கி செல்லவே வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications