Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரஞ்ச் அலர்ட்.. தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (அக்டோபர் 21) உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 26 ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai rain weather

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நாளை அக்டோபர் 21 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் அக்டோபர் 23 ஆம் தேதிக்குள் தென் மத்திய வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 26 ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் தென் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் வங்கக் கடலின் தென் மற்றும் மத்திய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+