குளிர்காலத்திலேயே உக்கிரம் காட்டும் வெயில்! சம்மர் வரை இப்படித்தானா? வானிலை ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போதே கோடைக்காலம் போல வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் அதன்பிறகு கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. அதே நேரத்தில் பனிப்பொழிவும் காலை மற்றும் இரவு நேரங்களில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்தது. தற்போது மழை முழுவதுமாக நின்றுவிட்ட நிலையில் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது.

Sun weather Tamil Nadu

கடந்த 3 நாட்களாக காலை நேரங்களில் மட்டுமே பனி நிலவியது. தற்போது பனியும் குறைந்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மதிய நேரங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கோடைக்காலத்திற்கு இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் வரை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். கடல் சார்ந்த அலைவுகள் சாதகமற்று இருப்பதனாலும், கடலில் இருந்தும் வறண்ட காற்றும், வளிமண்டலத்தில் வறண்ட வானிலையும் நீடிப்பதனாலும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும். பனிப்பொழிவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் பனிப்பொழிவு குறைந்துவிடும். அதே சமயம் வழக்கத்தை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும். குறிப்பாக கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கோடை காலத்தின் முதல் சுற்று வெயில் பதிவாகக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையானது அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை நீடிக்கும்.

அதற்கு பிறகு கடல் சார்ந்த அலைவுகள் சற்று சாதகமாக இருப்பதினால், கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோடை மழை பெய்யும் போது அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 18 முதல் 22 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+