ஆழ்ந்த காற்றழுத்தம் எங்கே? புயலாக உருவாகிறதா? தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா? வானிலை அப்டேட்
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது எங்கே இருக்கிறது என்பது குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 11.30 மணியளவில், விசாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கே 470 கிலோ மீட்டர் நிலைக் கொண்டிருந்தது. அது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 19 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் ஒரு சில இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தமும் ஒடிஸா நோக்கி செல்வதால் தமிழகத்தில் இனி மிதமான மழைக்கே வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுபெற்று வரும் 18ஆம் தேதி வங்கதேசத்தில் மோங்லா- கோபுபரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications