KKR vs SRH.. சென்னையில் ஐபிஎல் பைனல் பார்க்கும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் தந்த அட்வைஸ்!
சென்னை: ஐபிஎல் இறுதி போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மைதானத்தில் இன்று அதிகம் வியர்க்கும் எனக்கூறி போட்டியை காணும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வந்தன. இதில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் பிளேஆஃப் போட்டிக்கு முன்னேறின.

இதில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கேகேஆர் எனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் இறுதிப்போட்டி முன்னேறியது.
இந்த இருஅணிகள் இடையேயான இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வெல்லும் அணி கோப்பையை வெல்ல உள்ளது. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்து வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் தான் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பைனல் போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று மாலை 6.09 மணிக்கு வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சென்னையில் 6 மணி நிலவரப்படி 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ளது. இதில் ஈரப்பதத்தின் சதவீதம் என்பது போட்டி நேரத்தில் 80 முதல் 85 சதவீதம் வரை அதிகரிக்கும்.
இதனால் இன்று ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்க செல்வோர் அதிகளவிலான தண்ணீரை கையோடு எடுத்து செல்ல வேண்டும். அதோடு அடர்த்தியான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதிகளவில் வியர்க்க வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளார்.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications