6 ஆயிரம் மத்திய அரசு பணமா? மாநில அரசுப் பணமா? .. புதிய விளக்கம்
சென்னை: கடந்த 5 ஆம் தேதி வீசிய மிக்ஜாம் புயலால் உருக்குலைந்துபோன சென்னை மாநகரம் மெல்ல தன் இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக, தமிழ்நாடு அரசு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நியாயவிலைக்கடைகள் மூலம் இந்த நிவாரணத் தொகை நேரடியாகவிநியோகிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிடுவதற்காகக் கடந்த வாரம் சென்னைக்கு வந்த மத்தியக் குழு, தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளைக் கையாண்ட விதத்தையும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாராட்டி விட்டுச் சென்றது.
இந்த மழை வெள்ளத்தால் சேதமான சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பைச் சீர்செய்வதற்காகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுவதற்காகவும் இடைக்கால நிவாரண மாக ரூ. 5,060 கோடியை உடனடியாக வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அந்தளவுக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ரூ. 500 கோடியைத்தான் உடனடியாக ஒதுக்கியது. அது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா, "தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் (NDMF) கீழ் தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ. 561.29 கோடி அளிக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்திருந்தார். அதில் ரூ.500 கோடி மத்திய அரசியின் உதவியும் அடங்கும்" என்று அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
பேரிடர் காலத்தில் மத்திய அரசு உரிய உதவி செய்யவில்லை என திமுகவைத் தொண்டர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட ஆரம்பித்தனர். கூடவே பிரதமர் மோடியையும் விமர்சிக்கத் தொடங்கினர்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக தொண்டர்கள் பலரும் விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அப்போது சிலர் மத்திய அரசு கொடுத்த 500 கோடியிலிருந்துதான் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று எழுத ஆரம்பித்தனர்.

இந்த விவாதத்தின் இடையே 'அப்பா வீட்டுக் காசையா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணத்திலிருந்துதானே கேட்கிறோம். மற்ற மாநிலங்கள் எல்லாம் கேட்காமலே தருகிறீர்களே? தமிழ்நாட்டை மட்டும் ஏன் தனியாகப் பார்க்கிறீர்கள்?' என்று பேசினார்.
அந்தப் பேச்சு மீண்டும் விவாதமானது. அதற்குப் பதிலடியாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் களத்தில் இறங்கினார். மத்திய அரசை ஆதரித்தும் திமுகவை விமர்சித்தும் அவர் கருத்துகளை முன்வைத்தார்.
வெள்ள நிவாரணம் என்ற செய்தி மறைந்து 'யார் அப்பன் வீட்டுக்காசு' என்பது பேசு பொருளாக மாறி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணமாக வழங்கி வரும் 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசின் பணமா? மாநில அரசின் பணமா? என்பது குறித்துத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஒரு புதிய விளக்கத்தை முன்வைத்திருக்கிறார்.
"மத்திய அரசிடம்தான் அதிகம் பணம் உள்ளது. அந்தப் பணத்தை இந்த மாதிரியான பேரிடரின் போது மாநில அரசுக்கு அது கொடுக்க வேண்டும். பொதுவாக மாநில அரசு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்கும்.

அதை ஆய்வு செய்து நாங்கள் தருகிறோம் என்று மத்திய அரசு சொல்லும். மாநில அரசுக்குத் தெரியும், நாம் அதிகமாகக் கேட்டால்தான் மத்திய அரசு அதில் பாதியாவது தரும் என்று. மத்திய அரசுக்கும் தெரியும். இவர்கள் அதிகமாகக் கேட்கிறார்கள், குறைத்துத் தருவோம் என்பது.
ஆனால், பொதுவாக இந்தப் பேரிடர் நிதியில் என்ன நடக்கிறது என்றால், மத்திய அரசு மாநில அரசுக் கேட்கும் தொகையை ஆய்வு செய்தபிறகு முறையாகத் தருவதில்லை என்பதுதான். அப்படியான நிலைமைதான் இங்கே நடைமுறை யதார்த்தமாக இருக்கிறது.

மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது. அந்த நிதி வரும் வரை இவர்கள் சும்மா ஒன்றும் இல்லை. இவர்களின் நிதிநிலையை வைத்து இந்தப் பேரிடர் மீட்புப் பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒன்றிய அரசிடம்தான் பேரிடர் நிதி என ஒன்று உள்ளது. அதை இதைப் போன்ற காலங்களில் செலவழிப்பதற்காகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அதைத்தான் மாநில அரசு கேட்கிறது.

மத்திய அரசு என்பது ஏதோ எஜமானர்கள் இல்லை. அவர்கள் ஏதோ சும்மா தருவதும் இல்லை.
பலரும் மத்திய அரசு என்பது ஏதோ எஜமானைப் போல என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி கிடையாது. இது ஜனநாயக நாடு. இந்தியா என்று ஒரு கூட்டு ஒன்றியம்.

ஒன்றிய அரசிடம் உள்ள நிதியை மாநில அரசுக்குப் பிரித்து வழங்க வேண்டும். அது அவர்களின் கடமை. மத்திய அரசிடம் உள்ள நிதியை மாநில அரசுக்குத்தான் அவர்கள் தர முடியும். அதைவிட்டு அவர்கள் வேறு யாருக்குத் தர முடியும் சொல்லுங்கள்.
இது ஒன்றிய அரசுப் பணம் இல்லை. மாநில அரசு பணம் இல்லை. இது மக்களின் வரிப் பணம். அந்த மக்கள் பேரிடரில் தவிக்கும்போதுதான் தேசிய பேரிடர் நிதியைச் செலவழிக்கச் சொல்கிறோம். இந்த நாட்டில் அந்தப் பணத்தைச் செலவழிக்காமல் ஆப்பிரிக்காவிற்குப் போய் செலவழிக்கப் போகிறார்கள்? " என்கிறார்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications