வேளச்சேரியில் மூழ்கும் தரைதளம்? இதுலாம் புதுசு இல்லையே.. படகில் மீட்கப்பட்ட பெண்கள் பகிர்ந்த சோகம்
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையால் வேளச்சேரியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பொதுமக்கள் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான், ‛‛இது எங்களுக்கு பழகிவிட்டது. இது ஒன்றும் எங்களுக்கு புதுசு இல்லை. ஆனாலும் கஷ்டமாக தான் இருக்கிறது’’ என பெண் ஒருவர் புலம்பினார்.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் சென்னையை கனமழை மிரட்டி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் புயல் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலேயே சென்னைக்கு வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்து தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
ஏறக்குறைய சென்னையின் அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை காலை வரை தொடர்ந்து பெய்தது. அதன்பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த மழை மீண்டும் காலை 9 மணிக்கு தொடங்கி தொடர்ந்து வருகிறது. இன்றைய தினத்தை ஒப்பிடும்போது நாளை சென்னையில் மிகவும் தீவிரமாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரே இடத்தில் குவியும் மேகம்.. ஆஃபிஸ் போனவங்க சீக்கிரம் வீட்டுக்கு போங்க - வெதர்மேன் ‛வார்னிங்’
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆகியவையும் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று காலையில் பெய்த கனமழையின் காரணமாக வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் சிக்கி தவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டனர். அதோடு அங்கு தேங்கியுள்ள மழை நீரை கனரக மோட்டார் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
காலியாகும் தாம்பரம்.. அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்! ‛ரெட் அலர்ட்’டால் வந்த சிக்கல்
இந்நிலையில் தான் வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் படகில் மீட்கப்பட்ட ஏஜிஎஸ் காலனியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‛‛காலையில் பெய்த மழைக்கே வீட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. இன்னும் 2 நாட்கள் மழை இருப்பதாக சொல்லி இருக்கிறார். இதனால் தரைத்தளம் என்பது மூழ்கிவிடும். தற்போது தண்ணீர் வீட்டுக்குள் வந்துள்ளது. இன்னும் கனமழை பெய்தால் தரைதளம் மூழ்கும். நான் எனது அக்காள் வீட்டுக்கு செல்கிறேன்’’ என்றார்.
அதேபோல் இன்னொரு பெண் கூறும்போது, ‛‛நாங்கள் 2005ல் இருந்து ஏஜிஎஸ் காலனியில் தான் இருக்கிறோம். வருடம் வருடம் இது பழகிவிட்டது. இது ஒன்றும் எங்களுக்கு புதுசு இல்லை. ஆனாலும் கஷ்டமாக தான் உள்ளது. இந்த கஷ்டத்தை ஒவ்வொரு முறையும் சந்தித்து வருகிறோம்’’ என வருத்தத்தை பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications