பேய்காற்று + ஆலங்கட்டி மழை.. பெங்களூரை குளிர வைத்த கோடை மழை.. ஹேப்பியான மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில் இன்று பேய்காற்றுடன் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பெங்களூர் குளுகுளு கிளைமேட்டுக்கு மாறி உள்ளது.
பெங்களூரில் கடந்த பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்தனர். அதோடு நகரின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போர்வெல்லில் தண்ணீர் வற்றியதால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் பிரச்சனை தலைத்தூக்கியது.

இந்த தண்ணீர் பிரச்சனைக்கு நடுவே அதிகரித்து வந்த வெப்பத்தால் வீட்டில் ஃபேன், ஏசி இன்றி இருக்க முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் தான் பெங்களூரில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதாவது மே மாதம் முதல் வாரத்தில் கோடை மழை பெய்யும் என கணித்தது.
அதன்படி கடந்த 6 நாட்களாக பெங்களூரில் வெயில் ஓரளவு தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதோடு அவ்வப்போது சில இடங்களில் மழை லேசாக பெய்து வந்தது. இந்நிலையில் தான் இன்று மாலையில் பெங்களூரின் பல இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது.
அதன்படி பெங்களூர் சிவாஜி நகர், ஓகலிபுரம், கேஆர்புரம், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், உள்பட நகரின் பல்வேறு முக்கிய நகரில் மாலையில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்தது. இதுதவிர ஹெப்பால், நாகவரா, ஆர்டி நகர், பாகலூர், எலகங்கா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. உல்லால் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
மேலும் சிக்கஜாலா பகுதியில் கனமழை பெய்தது. பெங்களூர் புறநகர் பகுதியான நெலமங்களாவிலும் இடியுடன் கூடிய கனமழை என்பது பெய்தது. பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இருப்பினும் கூட வெயிலின் கோரப்பிடியில் சிக்கி தவித்த மக்கள் கோடை மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இன்று பெய்த கனமழையால் நகரின் கிளைமேட் என்பது மொத்தமாக மாறி உள்ளது. வெப்பம் தணிந்து குளிரான சூழல் நிலவி வருகிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications