காலையில் மழைநீரை காணோம்.. ஒரே நாளில் மீண்ட கேகே நகர் பகுதி! 2015ல் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா?
சென்னை: கடந்த 2015 சென்னை பெருவெள்ள காலத்தில், மக்கள் அனுபவித்த துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்தனர். தற்போதைய சென்னை வெள்ளத்திலும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு தண்ணீர் தேங்கியபோதும், விரைவாகவே தண்ணீர் வடிந்துவிட்டது என்கிறார்கள் சென்னை மக்கள்.
2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. எந்தவித முன்னறிப்புமின்றி செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் அடையாறு ஆற்றில் பொங்கி வந்து, சென்னையை வெள்ளக்காடாக்கியது. அதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வடபழனி, கே.கே.நகர் ஆகியவையும் அடங்கும்.

பெருமழை வெள்ளம்: இந்த முறையும் கடந்த 2015ஆம் ஆண்டை விட அதிகமான மழை பெய்துள்ளது என்கிறது அரசு வெளியிட்டுள்ள தகவல்கள். நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று இரவு வரை கொட்டிய கனமழையால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில், மழைநீரில் தத்தளித்தன. வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கியதால், வெளியில் கூட வர முடியாத சூழல். ஏராளமான வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை பகுதிகளில், கனமழை காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தரைத் தளங்களில் வசிக்கும் மக்கள், மேல் தளங்களுக்குச் சென்றனர். பலர், முக்கியமான பொருட்களோடு, வேறு பகுதிகளில் உள்ள தங்கள், உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
கண்கூடா தெரியுது: இந்நிலையில், மிக்ஜாம் புயல் நேற்று மாலை சென்னையை விட்டு விலகி, ஆந்திராவுக்குச் சென்ற நிலையில், படிப்படியாக மழை குறையத் தொடங்கியது. நள்ளிரவோடு, பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்தது. இதையடுத்து, மழைநீர் வேகமாக வடியத் தொடங்கியது. திமுக அரசு, கடந்த ஆண்டு முதல், மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டதன் விளைவு, கண்கூடாகத் தெரிவதாகச் சொல்கிறார்கள் கே.கே.நகர் மக்கள்.
2015 காலகட்டத்திற்கு முன்பிருந்து கே.கே.நகர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களிடம் பேசும்போது, அப்போது, சென்னை மழையில், தரைத்தளத்தில் எல்லா வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. அப்படியானதொரு சூழலை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதால், உடைமைகளை காப்பாற்ற முடியவில்லை. டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், ஏராளமான புத்தகங்கள் மழைநீரில் மூழ்கி வீணாகின.
உடனே மின்சாரம் வந்துவிட்டது: ஆனால், அதன்பிறகு, மக்களுக்கு வெள்ளம் பற்றிய எச்சரிக்கை உணர்வு வந்துவிட்டதால், இந்த ஆண்டு மழை வெளுக்க ஆரம்பித்ததுமே, உஷாராகி, முக்கியமான பொருட்களை டேபிள் அல்லது, ஸ்லாப்களில் வைத்துவிட்டோம், மழை வேகமாக பெய்து வந்தாலும், முன்பு போல அதிகம் தேங்கவில்லை. அதோடு, மழை விட்டதுமே, வேகமாக மழைநீர் வடியத் தொடங்கிவிட்டது என்கிறார்கள்.
மேலும், இன்று காலை 11 மணிக்குள் கே.கே.நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின் விநியோகமும் கிடைத்துவிட்டது. ஆனால், 2015 வெள்ள காலத்தில், நான்கைந்து நாட்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை, மழைநீர் சாலைகளில் தேங்கி இருந்தன. மழை ஓய்ந்த பிறகும், மிக மெதுவாக மழைநீர் அகற்றப்பட்டது. ஆனால், நேற்று இரவு மழை விட்ட நிலையில், இன்று காலையே பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கவில்லை என்கிறார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications