அடித்து பெய்த மழை.. சட்டென ஜில் மோடுக்கு போன சென்னை! இப்படியே இருந்தால் நல்லாதான் இருக்கும்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. சென்னையில் கூட வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதேபோல சென்னையில் பரவலாக லேசான மழை பெய்திருக்கிறது.
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், புரசை, வடபழனி, வளசரவாக்கம் என பல இடங்களில் லேசாக மழை தலைக்காட்டி இருக்கிறது. நேற்றும் மழை பெய்திருந்த நிலையில், இன்றும் மழை பெய்திருப்பது வெயிலின் தாக்கத்தை சற்று குறைத்திருக்கிறது. ஆனால், இந்த மழை போதுமானதாக இல்லை. லேசானதாகவும் குறைந்த நேரம் மட்டுமே மழை பெய்ததால், இம்மழை வெக்கையை கிளப்பிட்டுவிடும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இருப்பினும் காலையிலிருந்து அடித்த வெயிலுக்கு இந்த மழை எவ்வளவோ பரவாயில்லை. அடுத்தடுத்த நாட்களில் இதேபோன்று மழை பெய்தால் சென்னை ஜில்லென இருக்கும் என மக்கள் எதிர்பார்ககின்றனர்.
நேற்று தமிழகத்தின் வெயில் தீவிரமாக பதிவாகியிருக்கிறது. குறிப்பா மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் சூட்டை கிளப்பியிருக்கிறது. அதேபோல மற்ற மாவட்டங்களில் வெயில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 22.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது.
அடுத்து வரும் வானிலையை பொறுத்தவரை, "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை.15ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு
ஜூலை.16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை.18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (13-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 ° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (14-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என வானலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications