சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே வங்க கடலில் புயல்? கனமழைக்கு சான்ஸ் இருக்கா? வானிலை ஆய்வாளர் அப்டேட்
சென்னை: தமிழகத்தின் மலை பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே வங்க கடலில் புயல் உருவாவதற்கான ஒரு சாத்தியக்கூறு தென்படுவதாகவும் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் மக்களை பாடாய் படுத்திக் கொண்டு இருந்த வெயிலின் தாக்கம் தற்போது முன்பை விட சற்று தணிந்துள்ளது. உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் கூட வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாள் தோறும் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

வங்க கடலில் புயல்: சென்னையை பொறுத்தவரை கோடை மழை இந்த முறை மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தாலும் கூட நகருக்குள் சொல்லிக்கொள்ளும்படியாக தற்போது வரை மழை இல்லை. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் மழை எப்போதும் பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையே, வங்க கடலில் அடுத்த வாரம் அதாவது 21 ஆம் தேதிக்கு மேல் புயல் உருவாதற்கான சூழல் இருப்பது போல் வானிலை படிவங்கள் மூலம் தெரிவதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வங்க கடலில் புயல் உருவாகி வட வங்க கடல் நோக்கி சென்றால் சென்னை போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
அடுத்த 3 நாட்களுக்கு: இப்படியான ஒரு நிகழ்வு நடந்தால் சென்னையில் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை காலத்தில் வரும் புயல் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு. பெரும்பாலும் அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம்" என்றும் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்: இதேபோல், நாளை மறு நாள், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 17 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 18, 19 ல் எப்படி?: மே 18 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மே 19 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 20 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று தெரிவித்து உள்ளது.
சென்னையில் மழை எப்போது?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரை, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும். மே 18 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60-85% ஆகவும் இருக்கக்கூடும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications